- 63வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தஞ்சாவூர்
- விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம்
- தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் சங்கம்
தஞ்சாவூர், டிச.17:ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 63வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி சுற்றில், தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் விளையாடி ஜூனியர் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தனர். சாதனை படைத்த வீரர்கள் நேற்று காலை தஞ்சை ஸ்கேட்டிங் மைதானத்திற்கு வருகை தந்தனர்.
தஞ்சை விளையாட்டு வீரர்களான விஸ்வரூபன், ஜீவேஷ், அகிலேஷ், யோகன்சரன், சஞ்சய் பிரியன், நிஷாந்த், க்ரிஷிகேஷ், முகமது முக்தசீம், அபிஷேக் பிரியன், மஹிம், குமரன் ஹேம்நாத் மற்றும் பெண்கள் சீனியர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற பூர்ணிஷா மற்றும் ட்ரிப்பினா ஆலிவ் ஆகியோருக்கும் உடன் சென்று ஊக்குவித்த, தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் மாநில பொருளாளர் மாஸ்டர் ராஜு, பயிற்சியாளர்கள் ஜோஸ் மாஸ்டர், அரவிந்த் மாஸ்டர் ஆகியோருக்கும் தஞ்சாவூர் ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் தலைவர் ரவிக்குமார் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
