×

விஜய் கூட்டணிக்கு வருவாரான்னு ஜாதகம் பார்த்து சொல்ல முடியாது: உதயகுமார் விரக்தி

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மதுரையில் நேற்று நிருபர்களை சந்திதார். அப்போது அவரிடம், ‘‘ஓபிஎஸ், டிடிவி இருவரையும் பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பாராட்டியுள்ளாரே?’’ எனக் கேட்டதற்கு, ‘தேர்தல் நேரங்களில் பாராட்டுவதும், விமர்சிப்பதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது என்பதை காட்டுகிறது. அவரவருக்கு தெரிந்த செய்தியை, அவரவர் பாணியில் பாராட்டிக் கொள்கிறார்கள். இதை குற்றச்சாட்டாக சொல்ல முடியாது’’ என்றார்.

‘‘விஜய் உங்கள் கூட்டணிக்கு வருவார் என்று நம்புகிறீர்களா?’’ என்றதற்கு, ‘‘யார், யார் கூட்டணிக்கு வருவார்கள் என்று ஜாதகம் பார்த்து சொல்ல முடியாது. அதிமுகவில் எடப்பாடி தலைமையிலான கூட்டணியில் இணைவோரை மக்கள் வரவேற்க தயாராக உள்ளனர்’’ என்றார். ‘‘செங்கோட்டையன் சேர்ந்த பிறகு தவெக வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்?’’ என கேட்டதற்கு, ‘‘ஜனநாயக நாட்டில் தேர்தல் திருவிழாவின்போது வருவார்கள், போவார்கள். யாரையும் வர வேண்டாம் என்று சொல்ல முடியாது. சாமி யாருக்கு வரம் தரப்போகிறது என மக்கள் முடிவு செய்வார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலினா? எடப்பாடி பழனிசாமியா என்று மட்டுமே மக்கள் பார்ப்பார்கள்’’ என்றார்.

Tags : Vijay ,Udayakumar ,Madurai ,AIADMK ,minister ,BJP ,Annamalai ,OPS ,TTV ,
× RELATED மகாத்மா காந்தி மீதான வன்மத்தை...