19ம் தேதி வரைவு பட்டியல் வெளியான பின்பு வாக்காளர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை: 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் வாக்காளர்களின் விவரங்களை அணுகுவதற்கான வசதி மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் இணையதளங்களில் வழங்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வரைவு வாக்காளர் பட்டியல் 19ம் தேதி வெளியிடப்படுகிறது. பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர், இறந்தவர்கள், கண்டறிய இயலாத, முகவரியில் இல்லாத வாக்காளர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு செய்த வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் விவரங்களை அணுகுவதற்கான வசதி, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் இணையதளங்களில் வழங்கப்படும். பொதுமக்கள் தங்களது விவரங்களை தேவைப்படின் இப்பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: