சென்னை: பெரியாறு அணையிலிருந்து 18ஆம் கால்வாய் நீட்டிப்பு கால்வாயில் 17.12.2025 முதல் 31.12.2025 வரை 15 நாட்களுக்கு வினாடிக்கு 95 கன அடி வீதம் மொத்தம் 121 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம் மற்றும் போடி வட்டங்களிலுள்ள 4794.70 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
