×

ஏ.டி.ஆர்., சிறிய ரக விமான சேவைகள் இன்று முதல் நிறுத்தம்: இண்டிகோ நிறுவனம்

சென்னை: சென்னையில் இருந்து மதுரை மற்றும் திருச்சிக்கு தினமும் இயக்கப்பட்ட வந்த எடிஆர் சிறிய ரக விமானம் சேவைகள் இன்று முதல் திருத்தப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னை – திருச்சி இடையே தினமும் காலை 6 மணி முதல் இரவு 9மணி வரை இருமார்க்கமும் சேர்ந்து மொத்தம் 12 முறை ஏ.டி.ஆர்., சிறிய ரக விமானம் சேவைகளை இண்டிகோ நிறுவனம் வழங்கி வந்தது. இதைபோல் சென்னை – மதுரை இடையே இருமார்க்கமும் சேர்த்து 16 முறை ஏ.டி.ஆர்., சிறிய ரக விமான சேவைகள் இண்டிகோ நிறுவனம் சார்ந்து வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், மதுரை, திருச்சிக்கான 78 இருக்கைகள் கொண்ட ஏ.டி.ஆர்., சிறிய ரக விமான சேவைகள் இன்றுமுதல் நிறுத்தப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்குப் பதிலாக இன்று முதல் திருச்சி, மதுரைக்கு ஏ20N என்ற பெரிய ரக விமானங்களை இண்டிகோ நிறுவனம் இயக்கத் தொடங்கியுள்ளது. இந்த பெரிய ரக விமானங்களில் ஒரே நேரத்தில் 180 லிருந்து 184 பயணிகள் வரை பயணிக்க முடியும். இவ்விமானங்களில் பிசினஸ் கிளாஸ், முதல் வகுப்பு மற்றும் சாதாரண இருக்கைகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. சென்னை – திருச்சி இடையே காலை 9.10 மணிக்கும், மாலை 4.30 மணிக்கும் இதேபோல் திருச்சி சென்னை இடையே பகல் 11.45 மணிக்கும் இரவு 7 மணிக்கும் இந்த விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னை – மதுரை இடையே காலை 6.10மணி, பகல் 12.15மணி, இரவு 8.05ஆகிய நேரங்களிலும் மதுரை – சென்னை இடையே காலை 9.20மணி, மாலை 3.25மணி, இரவு 11.30 மணி ஆகிய நேரங்களிலும் ஏ20N விமானங்கள் இயக்கப்படுவதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : A. D. R. ,Indigo Company ,Chennai ,Indigo ,Madurai ,Trichy ,
× RELATED திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 29ம்...