திருவனந்தபுரம் திரைப்பட விழாவில் ஒன்றிய அரசுக்கு எதிரான படங்களுக்கு தடை

திருவனந்தபுரம்: இந்தியாவில் கோவா சர்வதேச திரைப்பட விழாவுக்கு அடுத்தபடியாக திருவனந்தபுரத்தில் நடைபெறும் திரைப்பட விழா பிரசித்தி பெற்றதாகும். இவ்வருட கேரள சர்வதேச திரைப்பட விழா கடந்த 12ம் தேதி திருவனந்தபுரத்தில் தொடங்கியது. இந்த விழாவில் சீனா, துருக்கி, வியட்நாம், கொரியா, பாலஸ்தீன் உள்பட 86 நாடுகளைச் சேர்ந்த 206 படங்கள் திரையிடப்படுகின்றன. இந்நிலையில் இந்த விழாவில் 19 படங்களை திரையிட திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை ஒன்றிய அரசின் கருத்துக்கு எதிரான மற்றும் பாலஸ்தீன ஆதரவு படங்களாகும். இதைக் கண்டித்து நேற்று திரைப்பட விழாவில் ரசிகர்கள் போராட்டம் நடத்தினர்.

Related Stories: