×

பிரியாணிக்கு இலையுடன் முட்டி மோதிய மகளிர் பஞ்சு மிட்டாய், பாப்கான் சாப்பிட்டு அன்புமணிக்கு உறுதுணையாக இருக்கணும்: உரிமை மீட்பு பயணத்தில் செளமியா அலப்பறை

விழுப்புரம்: பாமகவில் தந்தை ராமதாசுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையே கட்சி கைப்பற்றுவதில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், கணவருக்கு உதவியாக செளமியா அன்புமணி தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி நேற்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தென்னமாதேவியில் அவர் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், காலையில் நீங்கள் வரும்போது உங்களுக்கு மல்லிப்பூ, வளையல் எல்லாம் நிர்வாகிகள் வாங்கி கொடுத்திருப்பார்கள். குடும்ப விழாவாக அழைத்து சாப்பாடு போட்டு மனநிறைவாக அனுப்ப வேண்டும். சின்னபொண்ணு மாதிரி மனசில் கவலையெல்லாம் மறந்திட்டு பஞ்சு மிட்டாய் சாப்பிடனும். பாப்கான் சாப்பிட உங்கள் எம்எல்ஏ தயார் பண்ணி வச்சிருக்காங்க.

தமிழகத்தில் அன்புமணி பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறார். நீங்கள்தான் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது, சுடச்சுட பிரியாணி தயாரானதால் மகளிர் கூட்டம் சரசரவென வெளியேற முயன்றனர். அங்கிருந்த நிர்வாகிகள் யாரும் செல்லாத வகையில் கதவுகளை இழுத்து மூடினர். தொடர்ந்து சௌமியா பேசி முடித்ததும் பிரியாணி விருந்துக்கு மகளிர்கள் முண்டியடித்தனர். அப்போது ஒருவரையொருவர் முட்டித்தள்ளிய மோதிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் தாங்களே இலையை கையில் எடுத்துக் கொண்டு, தரையில் உட்கார்ந்து சாப்பிட தொடங்கினார். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் நிர்வாகிகளும் திண்டாடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Anbumani ,Soumya Alaparai ,Villupuram ,Ramadoss ,PMK ,Soumya Anbumani ,Tamil Nadu ,Villupuram district ,Vikravandi ,
× RELATED சொல்லிட்டாங்க…