×

ஆசிரியையிடம் ரூ.1,500 லஞ்சம் கல்வி அலுவலர் கைது

திருச்சி: திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் லதா பேபி (54). இவர், கூடுதல் பொறுப்பாக வையம்பட்டி வட்டார கல்வி அலுவலராகவும் பணிபுரிந்து வருகிறார். இவரது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் மணப்பாறையை சேர்ந்த விமலா(34) என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த ஜூலை மாதம் பணிமாறுதலில் வேறு பள்ளிக்கு சென்று விட்டார். ஏற்கனவே பணியாற்றிய பள்ளியில் ஜூலை மாதத்தில் பணியாற்றிய 4 நாட்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருந்துள்ளது. இதை பெறுவதற்காக ‘கொடுபடா’ சான்று கேட்டு வட்டார கல்வி அலுவலர் லதாபேபியை அணுகியுள்ளார். இதற்கு கல்வி அலுவலர் லதாபேபி, ரூ.1,500 லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து ஆசிரியை விமலா, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் நேற்று புகார் கொடுத்தார். போலீசார் ஆலோசனை பேரில் ரசாயனம் தடவிய 1,500ரூபாயை ஆசிரியை விமலா, கல்வி அலுவலர் லதா பேபியிடம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த போலீசார் கல்வி அலுவலர் லதா பேபியை கைது செய்தனர்.

Tags : Trichy ,Latha Baby ,Education ,Vaiyampatti ,Vimala ,Manapparai ,
× RELATED ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேளாண்மை அதிகாரி கைது