பூந்தமல்லி, டிச.16: பூந்தமல்லி பேருந்து நிறுத்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை, மதுவிலக்கு போலீசார், பிடித்து சோதனை செய்த போது, அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மகாதேபா நாக் (29) என்பதும், இவர் ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து பூந்தமல்லி பகுதியில் இளைஞர்கள் மாணவர்களுக்கு விற்றது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.
