சென்னை: முத்தமிழ்ப் பேரவை அறக்கட்டளை சார்பில் நடைபெறும் முத்தமிழ்ப் பேரவையின் இசைவிழா மற்றும் விருது வழங்கும் விழாவில் கலைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். நடிகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது. தஞ்சாவூர் முருகபூபதிக்கு மிருதங்கச் செல்வம் விருது வழங்கப்படுகிறது. திருமெய்ஞானம் சகோதரர்கள் ஐயப்பன், மீனாட்சிசுந்தரத்துக்கு நாதஸ்வரச்செல்வம் விருது. வடூவூர் எஸ்.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்திக்கு ராஜரத்னா விருது வழங்கப்பட்டது.
