திருவள்ளூர்: திருவள்ளூர் நகரம், 6வது வார்டு கிளைக் திமுக சார்பில் 207 மற்றும் 209 வாக்குச்சாவடிகளுக்கான தமிழ்நாடு தலைகுனியாது என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடிக்கான பாக பயிற்சி கூட்டம் நகர அவைத்தலைவர் கமலகண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்றது. பயிற்சி கூட்டத்திற்கு நகர செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகராட்சி முன்னாள் தலைவர் பொன்பாண்டியன், மாநில தொண்டர் அணி செயலாளரும், திருவள்ளூர் தொகுதி பார்வையாளருமான சேகர் ஆகியோர் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
இதில் நகர நிர்வாகிகள் ரவி, ராஜேஸ்வரி கைலாசம், நகர் மன்ற உறுப்பினர்கள் பிரபாகரன், அயூப் அலி, மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் புவனேஷ் குமார், கோபால், கருணாகரன், மஞ்சுளா குமார், குணசேகரன், நகர இளைஞரணி அமைப்பாளர் பவளவண்ணன், பாஸ்கர், சரவணகுமார், கற்பகம், உமா கோபால், பூங்குழலி, ஜோஷ்வா, குப்பாபாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
