உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் ஏர்போர்ட் நிலம் ஆக்கிரமிப்பு 28 பேர் மீது வழக்கு பதிவு

நொய்டா: உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தின் விரிவாக்கத்துக்காக தயானந்த்பூர், பீரம்பூர், முத்ரா, ரன்ஹோரா, குரைப் மற்றும் பங்கர் ஆகிய கிராமங்களில் சுமார் 1,182 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜேவாரில் உள்ள பகுதியில் விமான நிலைய விரிவாக்கம் செய்வதற்காக அறிவிக்கப்பட்ட பகுதியில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை செய்வதாக கிராமவாசிகள் 28 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: