சென்னை: புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நாளை நடக்கிறது. சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ், 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கிடும் வகையில் கற்போர் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் 1,567 கற்போர் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் இரண்டாம் கட்டமாக கண்டறியப்பட்ட 51,883 கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு 14ம் தேதி (ஞாயிறு) நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
