சிவராஜ் பாட்டீல் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

 

சென்னை: முன்னாள் ஒன்றிய உள்துறை அமைச்சரும் மக்களவை முன்னாள் தலைவருமான சிவராஜ் பாட்டீல் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்ததாவது; முன்னாள் ஒன்றிய உள்துறை அமைச்சரும் மக்களவையின் முன்னாள் தலைவருமான சிவராஜ் பாட்டீல் அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

பொதுவாழ்வில் அரைநூற்றாண்டுகால அனுபவம் கொண்ட அவர். மக்களவைத் தலைவர். ஆளுநர் உள்ளிட்ட பொறுப்புகளிலும் தமது கடமையைத் திறம்பட ஆற்றியவர். தலைவர் கலைஞர் அவர்கள் மீது பெரும் அன்பும் மரியாதையும் கொண்டு நட்பு பாராட்டிய அவரது மறைவு வேதனையைத் தருகிறது. அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர். நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: