சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியதாவது; தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வருபவர் ரஜினிகாந்த். திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றும் ரஜினியின் ஸ்டைல் மேஜிக் ரசிகர்களை பல்லாண்டு மகிழ்விக்கட்டும். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். வைகோ தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியதாவது; திரைத்துறையில் இன்னும் மிக உயர்ந்த சிகரங்களை அடைய ரஜினியை வாழ்த்துகிறேன் என தெரிந்தார்.
