×

வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளரின் முகம் அவ்ளோ அழகு…. உதடு எந்திரத்துப்பாக்கி… பொருளாதார மாநாட்டில் மெய்மறந்து வர்ணித்த டிரம்ப்

பென்சில்வேனியா: அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசில் வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளராக இருப்பவர் கரோலின் லீவிட்(24). இந்தநிலையில் பென்சில்வேனியாவில் நடந்த பொருளாதார வெற்றி குறித்த மாநாட்டில் டிரம்ப் திடீரென தனது வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளரை புகழத்தொடங்கினார்.

அப்போது டிரம்ப் கூறும்போது:
கரோலின் லீவிட் எவ்வளவு சிறந்தவர் தெரியுமா? நாங்கள் இங்கு எங்கள் சூப்பர் ஸ்டார் கரோலினைக் கூட அழைத்து வந்தோம். அவர் தொலைக்காட்சியில் வரும்போது, ​​பாக்ஸ், அதாவது ஆதிக்கம் செலுத்துகிறார், மிகவும் ஆதிக்கம் செலுத்துகிறார். அவரது முகம் அவ்வளவு அழகு. அந்த அழகான முகத்துடனும், ஒரு சிறிய இயந்திர துப்பாக்கியைப் போல நிற்காத உதடுகளுடனும் அவள் அங்கு எழுந்திருக்கும்போது( இப்படி பேசும் போது டிரம்ப் வினோதமான ஒலி எழுப்பி மெய்சிலிர்த்து பேசினார்) அவருக்கு எந்த பயமும் இல்லை… ஏனென்றால் எங்களிடம் சரியான கொள்கை உள்ளது’ என்று பேசினார்.

கரோலின் லீவிட், ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிக்கோலஸ் ரிச்சியோவை (60) மணந்தார். இந்த தம்பதிக்கு நிக்கோ என்ற மகன் உள்ளார்.

Tags : White House Press ,Trump ,Pennsylvania ,Caroline Leavitt ,White House ,Press Secretary ,US ,President ,
× RELATED உக்ரைன் – ரஷ்யா இடையே நடைபெறும் போர்...