புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர் ரக அதிநவீன வசதியுடன் கூடிய மின்தூக்கியை திறந்து வைத்தார் கூடுதல் காவல் ஆணையர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர் ரக அதிநவீன வசதியுடன் கூடிய மின்தூக்கியை (Lift) காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் ஆணையர் (தலைமையிடம்) பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

சென்னை பெருநகர காவல் துறை, காவல் ஆணையாளர் அலுவலகம் 8 அடுக்குகள் கொண்ட கட்டிடத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலான செயல்பாட்டின் காரணமாக பயன்பாட்டில் இருந்து வந்த மின்தூக்கிகள் செயல் திறன் குறைந்த நிலையில், பயன்பாட்டில் சிரமம் இருந்து வந்தது . இதனால் காவல் துறையினர், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்தை கருத்தில் கொண்டு புதிதாக காவல் ஆணையரகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதி நுழைவு வாயில்களின் அருகில் உள்ள மின்தூக்கிகளை புதியதாக மாற்றிட சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், உரிய நடவடிக்கை எடுத்து புதிதாக நவீன வசதிகளுடன் கூடிய 2 மின்தூக்கிகள் அமைக்கப்பட்டது. கிழக்கு பகுதி நுழைவு வாயிலில் உள்ள மின்தூக்கி சில மாதங்களுக்கு முன்னர் துவக்கி வைக்கப்பட்டு 20 நபர்கள் செல்லும் வகையில் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

மேற்கு பகுதியில் உள்ள நுழைவு வாயிலில் புதிதாக அமைக்கப்பட்ட மின்தூக்கியை காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) விஜயேந்திர பிதாரி, இன்று (10.12.2025) காலை காவலர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த புதிய மின்தூக்கி உயர் ரக வடிவமைப்புடன் 13 நபர்கள் கீழ்தளம் முதல் 8வது தளம் வரை இலகுவாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மின்தூக்கி தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் பொறியாளர் மேற்பார்வையில் அமைக்கப்பட்டு, அவசரஅறிவிப்பு, தீ தடுப்பு மீட்பு சைரன் ஓலி அமைப்புடன் தானியங்கி வசதியுடன் இயங்கும் வகையில் செயல்பாட்டுக்கு இன்று முதல் வந்துள்ளது. காவல் துறையினர், பொதுமக்கள், அமைச்சுப்பணியாளர்கள் புதிதாக மின்தூக்கி அமைத்து கொடுத்த காவல் ஆணையருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில், காவல் துணை ஆணையாளர் B.கீதா, (தலைமையிடம்) காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: