முத்துப்பேட்டை அருகே கந்தபரிச்சான் வாய்க்காலில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி

*அதிகாரிகள் ஆய்வு

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு, கோவிலூர் பகுதி கந்தபரிச்சான் வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு, வடகாடு கோவிலூர் பகுதியில் சமீபத்தில் டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் அப்பகுதியில் உள்ள தாழ்வான பகுதியில் நீர் தேங்கியது. மேலும் அப்பகுதி சாகுபடி கோட்டங்களும் நீரில் மூழ்கி சாகுபடி செய்திருந்த சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் இடுப்பளவு நேரில் மூழ்கி தேங்கி நின்றது.

தேங்கிய நீர் அப்பகுதியில் பாசன வாய்காலாகவும், வடிகாலாகவும் உள்ள கந்தபரிச்சான் வாய்க்காலில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து நின்றது. இதனால் நீர் வடிய முடியாமல் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கந்தபரிச்சான் வாய்காலில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி நீரை வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து நீர்வளத்துறை சார்பில் சில நாட்களாக பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. வெண்ணாறு வடிநில கோட்டம் செயற்பொறியாளர் ஆனந்தன், மன்னார்குடி வெண்ணாறு வடிநில உபகோட்டம் எண்-2 உதவி செயற்பொறியாளர் சோலைராஜன் மற்றும் இளம்பொறியாளர் கலைச்செல்வன் உடன் இருந்தனர்.

Related Stories: