சென்னை வேளச்சேரியில் வங்கியில் 1.25 கிலோ தங்கத்தை பெண் ஒருவர் விட்டுச் சென்றதால் பரபரப்பு!!

சென்னை: சென்னை வேளச்சேரியில் வங்கியில் 1.25 கிலோ தங்கத்தை பெண் ஒருவர் விட்டுச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வாங்கி மேலாளரை சந்தித்து வங்கியில் உள்ள லாக்கர் வசதி தொடர்பான விவரங்களை பெண் கேட்டுள்ளார். அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து வருவதாக கூறிவிட்டு நகை பையை விட்டுச் சென்றுள்ளார். 5 நாட்களாகியும் நகை பையை விட்டுச் சென்ற பெண் வங்கிக்கு திரும்பி வரவில்லை. வாங்கி மேலாளர் அளித்த புகாரின்பேரில் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: