×

தென் ஆப்ரிக்காவுடன் முதல் டி20 இந்திய அணி அபார வெற்றி

 

கட்டாக்: தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் டி20 போட்டி, ஒடிசாவின் கட்டாக் நகரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பந்து வீசியது. துவக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 4 ரன்னிலும், அவரைத் தொடர்ந்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

மற்றொரு துவக்க வீரர் அபிஷேக் சர்மா 17 ரன்னில் வெளியேற, திலக் வர்மா 26, அக்சர் படேல் 23, சிவம் தூபே 11 ரன்னில் அவுட்டாகினர். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக 59 ரன்(28 பந்து, 4 சிக்சர், 6 பவுண்டரி) எடுத்தார். 20 ஓவர் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழந்து 175 ரன் எடுத்தது. தென் ஆப்ரிக்கா தரப்பில் லுங்கி நிகிடி 3, லூதோ சிபம்லா 2 விக்கெட் வீழ்த்தினர்.

176 ரன் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 12.3 ஓவரில் 10 விக்கெட்டை பறிகொடுத்தது. அதிகபட்சமாக பிரேவிஸ் 22 ரன் எடுத்தார். இந்திய பந்துவீச்சில் அர்ஷ்தீப், பும்ப்ரா, வருண் சக்ரவர்த்தி, அக்சார் படேல் தலா 2 விக்கெட், ஹர்திக் பாண்ட்யா, துபே தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி 101 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.

Tags : India ,T20I ,South Africa ,Cuttack ,
× RELATED தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டி20...