×

பிட்ஸ்

 

* ஜேஎஸ்எல் லீக் கால்பந்து திருநங்கையர் பங்கேற்பு

ஜாம்ஷெட்பூர்: இந்திய கால்பந்தாட்ட வரலாற்றில் முதல் முறையாக, திருநங்கையர் விளையாடும் 7 அணிகள் சேர்ந்து, ஜாம்ஷெட்பூரில் ஜாம்ஷெட்பூர் சூப்பர் லீக் (ஜேஎஸ்எல்) என்ற பெயரில் புதிய தொடரை துவக்கி உள்ளனர். இந்த தொடரில், ஜாம்ஷெட்பூர் எப்சி, சாய்பாஸா எப்சி, சக்ரதர்பூர் எப்சி, ஜாம்ஷெட்பூர் இந்திராநகர் எப்சி, நவோமுந்தி எப்சி, சராய்கேலா எப்சி, கோலன் டைகர் எப்சி ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு அணியில் 5 திருநங்கையர் ஆடுவார்கள். துவக்கத்தில் 4 அணிகளை கொண்டு போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது. பின்னர், அணிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

* ஜம்முவில் மாரத்தான் இளைஞர்கள் உற்சாகம்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் ராணுவத்தால் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் நூற்றுக்கணக்கானோர் உற்சாகத்துடன் பங்கேற்று ஓடினர். இப்போட்டியை, ராணுவத்தின் பிம்பர் காலி பிரைகேட் கமாண்டர், பிரிகேடியர் ராகுல் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். மெந்தர் திருவிழாவையொட்டி இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் கூறினர். பிரிகேடியர் ராகுல் குமார் கூறுகையில், ‘இளைஞர்கள் உடல் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் ஆயுதப்படை வீரர்களாக சேர்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்’ என்றார்.

* ஐஎல்டி20யில் சூப்பர் ஓவர் டிசர்ட் வைபர்ஸ் அபாரம்

துபாய்: சர்வதேச லீக் டி20 (ஐஎல்டி20) போட்டியில் நேற்று டிசர்ட் வைபர்ஸ்-கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும், 20 ஓவர்களில் தலா 179 ரன்கள் எடுத்ததால், இத்தொடரின் முதல் சூப்பர் ஓவர் சுற்று போட்டி நடத்தப்பட்டது. அதில், டிசர்ட் வைபர்ஸ் அணி 13 ரன்கள் குவித்தது. அதற்கு பதிலடியாக ஆடிய கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணியால் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதையடுத்து, போட்டியில் டிசர்ட் வைபர்ஸ் அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது.

Tags : JSL ,League ,Jamshedpur ,Jamshedpur Super ,
× RELATED தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டி20...