×

குன்னூரில் கடந்த ஒரு ஆண்டாக அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது

குன்னூர்: குன்னூர் பகுதிகளில் கடந்த ஓராண்டுக்கு மேலாக பல்வேறு பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்த கரடி கூண்டில் சிக்கியது. நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரின் முக்கிய பகுதிகளான பெட்போர்டு, உபாசி, சிம்ஸ் பூங்கா, உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த ஓராண்டுக்கு மேலாக கரடி ஒன்று சுற்றித்திரிந்து வந்தது. இதனால், பகல் மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் அச்சமடைந்ததோடு‘, இரவு நேரங்களில் பெரும்பாலான மக்கள் கரடிக்கு அச்சமடைந்து வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் தவித்து வந்தனர். இதனால், குன்னூர் நகர பகுதி மக்கள் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து குன்னூர் சுற்றுப்பகுதிகளில் கரடி சுற்றித்திரிந்த 4 இடங்களில் குன்னூர் வனசரகர் ரவீந்திரநாத் தலைமையிலான வனத்துறையினர் கூண்டு வைத்தனர். 10 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் கடந்த ஓராண்டாக கரடியை பிடிக்க தீவிர முயற்சிகளை செய்து வந்தனர். ஆனால், கரடி எந்த கூண்டிலும் சிக்காமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது.

இந்நிலையில், நேற்று காலை கன்னிமாரியம்மன் கோயில் பகுதியில் வனத்துறை வைத்திருந்த இரும்பு கூண்டில் கரடி சிக்கியது. இதை ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு நேற்று காலை கூண்டில் சிக்கிய கரடி, குன்னூரில் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. கூண்டைத் திறந்தவுடன் கரடி வாகனத்திலிருந்து குதித்து வனப்பகுதிக்குள் ஓடிய வீடியோ காட்சிகளை வனத்துறையினர் வெளியிட்டனர்.
குன்னூரில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி கூண்டில் சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்து.

Tags : Coonoor ,Coonoor, ,Nilgiris district ,Bedford ,Upasi ,Sims Park ,
× RELATED சிவகாசி அருகே பள்ளி நிர்வாகி வீட்டில்...