×

குறைதீர்க்கும் கூட்டத்தில் 225 மனுக்கள் பெறப்பெற்றன உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தல்

 

ஈரோடு, டிச.9: ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், கலெக்டர் கந்தசாமி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, விதவை உதவித்தொகை, கருணை அடிப்படையில் வேலை, மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், விலையில்லா தையல் இயந்திரம், ஆக்கிரமிப்பு மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் என மொத்தம் 225 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர் கந்தசாமி பெற்று, உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்.
மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Tags : Erode ,Erode District Collectorate ,Collector ,Kandasamy ,
× RELATED அந்தியூர் அரசு மருத்துவமனையில்...