×

அதிமுக மாஜி அமைச்சர் வீடு, பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

இலுப்பூர்: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளிக்கு நேற்று காலை 11 மணிக்கு இமெயில் வந்தது. அதில், பள்ளியில் வைக்கப்பட்டுள்ள 6 ஆர்டிஎக்ஸ் குச்சிகள் விரைவில் வெடிக்க உள்ளது. மதியம் 2 மணிக்குள் ஊழியர்கள், மாணவர்களையும் வெளியேற்றவும். இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டிலும் குண்டு வெடிக்க கூடும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து இலுப்பூர் போலீசார் அந்த பள்ளியிலும் அதிமுக மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை செய்தனர். வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. போலீசார் வழக்கு பதிந்து இமெயில் அனுப்பியவர் பற்றி விசாரிக்கின்றனர்.

Tags : AIADMK ,minister ,Ilupur ,CBSE ,Pudukkottai ,
× RELATED கும்பகோணத்தில் போலி ஆதார், பான் அட்டை தயாரித்து கொடுத்தவர் கைது