×

போலீஸ்காரர் கையை கடித்த தவெக தொண்டர் கைது

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மண்டி அருகே, மதுக்கடையையொட்டி தனியாருக்கு சொந்தமான பாரை அகற்றக்ேகாரி, தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர்த்து, மதுக்கடை அருகே தடுப்புகளை எட்டி உதைத்து உடைக்க முயன்ற தவெகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.அப்போது, தவெக தொண்டர் ஒருவர், போலீஸ்காரரின் கையை பிடித்து கடித்தார். அவரை சக போலீசார் மீட்டனர். இதனை தொடர்ந்து, 16 பெண்கள் உள்பட 105 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், மாலையில் விடுவித்தனர். இதனிடையே, போலீஸ்காரரின் கையை கடித்த தவெக தொண்டர் ஜெமினி என்பவரையும், தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட ஜெயபிரகாஷ், கணேசன், கிருஷ்ணன், வினோத்குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

Tags : Thaveka ,Palacode ,Palacode, Dharmapuri district ,
× RELATED கும்பகோணத்தில் போலி ஆதார், பான் அட்டை தயாரித்து கொடுத்தவர் கைது