×

8 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 75,343 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 26,505 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று இரவு எண்ணப்பட்டது. அதில் ரூ.3.69 கோடி கிடைத்துள்ளது.

இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 12 அறைகளில் பக்தர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்திலும் நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்திலும் சுவாமியை தரிசனம் செய்தனர்.

Tags : Tirupati ,Tirumala ,Tirupati Ezhumalaiyan Temple ,Vaikuntam Q Complex… ,
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை 99.27% எஸ்ஐஆர்...