உத்தமபாளையம், டிச.8: ராயப்பன்பட்டி அருகே 39 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ராயப்பன்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகமான அளவில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து அதிகாலை மற்றும் நள்ளிரவு நேரங்களில் விற்பனை நடப்பதாக ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் எஸ்.ஐ ராஜசேகர் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆனைமலையன்பட்டி – வெள்ளக்கரடு பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலையில் விற்பனை செய்ததாக ராயப்பன்பட்டி அச்சங்குளத்தைச் சேர்ந்த, ஈஸ்வரன்(37), என்பவரிடம் இருந்து 39 மதுபாட்டில்களை ராயப்பன்பட்டி போலீசார் பறிமுதல் செய்தனர். சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
