மதுரை, டிச. 8: மதுரையில் உள்ள முக்தீஸ்வரர் கோயிலில் இன்று (டிச.8) காலை குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மதுரை, மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயிலான தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு இரு முறை சூரிய ஒளிக்கதிர் நேரடியாக சுவாமி வீற்றிருந்து அருள் பாலிக்கும் கருவறையில் விழுவது வழக்கம். இதன்படி திருவிளையாடல் தலமாக இக்கோயில் அமைந்துள்ளது. இதனால் பல்வேறு பகுதியில் இருந்து மதுரை வரும் பக்தர்கள், மீனாட்சி அம்மனை தொடர்ந்து, தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் மற்றும் முக்தீஸ்வர் கோயிலில் தரிசனம் செய்வது வழக்கம்.
