மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, பாலிவுட் இசையமைப்பாளர் பலாஷ் முச்சாலை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தார். திருமண நாளன்று, மந்தனாவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் திருமணம் நின்றது. அதன் பின், பலாஷ் வேறு பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் மந்தனா வெளியிட்டுள்ள பதிவில், ‘கடந்த சில வாரங்களாக எனது வாழ்க்கை பற்றி பல்வேறு யூகங்கள் உலவி வந்த நிலையில் அதுபற்றி பேச வேண்டிய சூழல் வந்துள்ளது. எனது திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை இந்த தருணத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.
