×

குரூப் 4 தேர்வர்களுக்கு மாதிரி தேர்வு

 

திருச்சி, டிச.7: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குருப் 4 போட்டித்தேர்விற்கான மாதிரி தேர்வு வரும் 8ம்தேதி நடைபெற உள்ளது. திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம், என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமி மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி சக்ஸஸ் இணைந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப் 4 போட்டித் தேர்விற்கு மாதிரி தேர்வு நாளை (டிச.8ம் தேதி) திங்கட்கிழமை காலை 10 மணி முதல் 1.30 மணி முடிய மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது.

தேர்விற்கான மாதிரி தேர்வில் முழு பாட பகுதிகளிலிருந்தும் வினாக்கள் இடம் பெறும். இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை. மாதிரி தேர்வில் வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு ஓ.எம்.ஆர்.விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தேர்வு நடைபெறும். மாதிரி தேர்வு முடிந்தவுடன் ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்கள் உடனடியாக தெரிவிக்கப்பட்டு குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு மதிப்பெண் அதிகப்படுத்துவதற்கு அறிவுரைகளும், வழிமுறைகளும் வழங்கப்படும்.

 

Tags : Trichy ,Tamil Nadu Public Service Commission ,TNPSC Group 4 ,Trichy District Central Library ,Reader's Circle, N.R.I.A.S. Academy ,Rotary Club ,Trichy… ,
× RELATED திருச்சி துறையூர் அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்