மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு நாகையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

நாகப்பட்டினம், டிச.7: நாகப்பட்டினம் அவுரி திடலில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மேகதாட்டில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியை நிறுத்த கோரி நாகப்பட்டினம் அவுரித் திடலில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆகியவை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் தனபாலன் தலைமை வகித்தார். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் சேரன், செயலாளர் பிரகாஷ், மாவட்ட பொறுப்பாளர்கள் கார்த்திக், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Related Stories: