நள்ளிரவில் வீட்டின் கதவு உடைப்பு; தப்பி ஓடிய கொள்ளையன் வாகனம் மோதியதில் பலி

 

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி அனிதா (29) நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு 2 குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணியளவில் வீட்டின் முன்பக்க கதவவை உடைக்கும் சத்தம் கேட்டு அலறி எழுந்த அனிதா, பக்கத்து வீட்டில் வசிக்கும் மாமனாருக்கு செல்போனில் தகவல் கொடுத்தார்.

அவர் வெளியே வந்து பார்த்தபோது, 2 வாலிபர்கள் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டிருப்பதை கண்டு கத்தி கூச்சலிட்டார். 2 பேரும் பைக்கில் தப்ப முயன்றனர். ஆனால் பைக் ஸ்டார்ட் ஆகாததால் அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர். தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த ஏதோ ஒரு வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொருவர் தப்பிவிட்டார். பலியான கொள்ளையனின் விவரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: