சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் சுக்கிரவார்பட்டி ரோடு முத்துமாரியம்மன் நகரை சேர்ந்தவர் ஈஸ்வரபாண்டியன் (46). இவர், மூவேந்தர் முன்னேற்ற கழகத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு திருத்தங்கல் அண்ணா சிலை அருகே ஒரு பாருக்கு மது அருந்த சென்றுள்ளார். அங்கு அவரது நண்பர் அதிமுகவை சேர்ந்த முத்துராமலிங்கம் மது அருந்தி கொண்டிருந்துள்ளார். இருவரும் அரசியல் சம்பந்தமாக பேசி கொண்டிருந்தபோது வாக்குவாதமாகி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முத்துராமலிங்கம், பார் கேசியரான முத்துப்பாண்டியும் சேர்ந்து ஈஸ்வரபாண்டியனை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் டூவீலரில் வைத்திருந்த கத்தியை எடுத்து ஈஸ்வரபாண்டியனின் கையில் முத்துராமலிங்கம் குத்திவிட்டு தப்பினார். போலீசார் வழக்குப்பதிந்து முத்துராமலிங்கம், முத்துப்பாண்டியை கைது செய்தனர்.
மூமுக நிர்வாகிக்கு கத்திக்குத்து: அதிமுக பிரமுகர் கைது
- அஇஅதிமுக
- சிவகாசி
- ஈஸ்வரபாண்டியன்
- முத்துமாரியம்மன் நகர், சுக்ரவார்பட்டி ரோடு, திருத்தங்கல்
- சிவகாசி, விருதுநகர் மாவட்டம்
- விருதுநகர் கிழக்கு மாவட்டம்
- மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
- அண்ணா சிலை
- திருமங்கலம்
