சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் 950 டன் நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு கப்பல் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுப்பி வைத்தார். டிட்வா புயலால் கடுமையாக பாதித்த இலங்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணம் பொருட்கள் அனுப்பப்பட்டது. நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் கப்பலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார். அரசி, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தமிழ்நாடு அரசு சார்பில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
