×

ஈரோட்டில் பலத்த காற்று வாகை மரம் வேருடன் சாய்ந்தது

 

ஈரோடு, டிச. 6: ஈரோடு, புதுமஜீத் வீதியில் இருந்து கந்தசாமி வீதி சாலையில் வாகை மரம் ஒன்று இருந்தது. நேற்று இரவு திடீரென பலத்த காற்று வீசியதால் வாகை மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. அப்போது, மரத்தின் கிளைகள் அந்த மின்கம்பிகளில் பட்டு, கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பொறி பறந்தது. தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்தனர்.

மரம் விழுந்தபோது அந்த வழியாக யாரும் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆனால், மரம் விழுந்ததில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பைக் ஒன்று சேதமடைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து, மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பைக் சேதம்

Tags : Erode ,Puthumajith Road ,Kandasamy Road ,
× RELATED ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி: தொழிலாளி அதிரடி கைது