×

ஆடவர் ஜூனியர் உலக ஹாக்கி அரையிறுதியில் இந்தியா

 

சென்னை: சென்னையில் நேற்று ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி காலிறுதிப் போட்டிகள் நடந்தன. முதல் போட்டியில், ஸ்பெயின் அணி, 4-3 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது. 2வது போட்டியில், நடப்பு சாம்பியன் ஜெர்மனி-பிரான்ஸ் தலா 2 கோல்கள் போட்டன. பின்னர் நடந்த ஷூட் அவுட்டில், 3-1 என்ற கணக்கில் ஜெர்மனி வென்றது. 3வது காலிறுதியில் அர்ஜென்டினா, 1-0 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது. கடைசி காலிறுதியில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் களம் கண்டன. இரு அணிகளும் தலா 2 கோல்கள் போட்டதால், ஷூட் அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

Tags : India ,Women's Junior World Hockey Semifinals ,Chennai ,Women's Junior World Cup Hockey Quarterfinals ,New Zealand ,Germany ,France ,
× RELATED ஆஷஸ் தொடர் 2வது டெஸ்ட் ட்டி படைக்கும்...