வாஷிங்டன்: அமெரிக்காவின் உதவியுடன் காங்கோ மற்றும் ருவாண்டா நாடுகளுக்கு இடையே ஒரு அமைதி ஒப்பந்தம் நேற்று அதிபர் டிரம்ப் முன்னிலையில் வாஷிங்டன் நகரில் கையெழுத்தானது. காங்கோ அதிபர் பெலிக்ஸ் ஷிசெகெடி மற்றும் ருவாண்டாவின் பால் ககாமே ஆகியோர் நேற்று டிரம்பை சந்தித்து, காங்கோவின் கிழக்குப் பகுதியில் காங்கோ ஆயுதப் படைகளுக்கும் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிக் குழுவிற்கும் இடையே நடந்து வரும் போரை நிறுத்த முயற்சிக்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப் காங்கோ மற்றும் ருவாண்டா அரசுகளை பாராட்டினார். ஆனால் சமாதான ஒப்பந்தம் நடந்த சில மணி நேரங்களில் அதை மீறி சண்டை தீவிரமடைந்துள்ளதாக கிழக்கு காங்கோ குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
