சென்னை: திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்து ம.நீ.ம தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் அன்பே சிவம் – அறிவே பலம் என பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது: ‘‘மதங்களின் அடிப்படை மனிதம் போற்றுவது. பொதுஅமைதிக்கும் மதநல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைவிக்கும் எந்தப் புதிய செயல்திட்டங்களுக்கும் நாம் பலியாகி விடக்கூடாது. அன்பே சிவம், அறிவே பலம்’’ இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
