அம்பத்தூர் அருகே மின் கம்பியில் உரசிய கண்டைனர் லாரியை தொட்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழப்பு..!!

சென்னை: அம்பத்தூர் அருகே மின் கம்பியில் உரசிய கண்டைனர் லாரியை தொட்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மதுரவாயல் பைபாஸ் நெடுஞ்சாலையில் இருந்து சென்னை அம்பத்தூர் பட்டறைவாக்கம் தொழிற்பேட்டைக்கு அருகில் உள்ள ஒரு கம்பெனிக்கு கண்டைனர் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது, மின்கம்பத்தின் அடியில் இருந்த மின்கம்பி அறுந்து லாரி கீழே விழுந்தது. அந்த லாரி தீ பிடித்து எரிய தொடங்கியது.

இந்த சமயத்தில் ஒருவர் கூடையை பிடித்து கொண்டு அந்த வழியாக நடந்து சென்றார். அவர் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த நபர் யார் என்று தெரியவில்லை. அவரது உடலை கே.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கண்டைனர் லாரியில் இருந்த தீயை அணைத்தனர். விபத்தினால் ஏற்பட்ட போக்குவரத்துக்கு நெரிசலை காவல்துறையினர் சரி செய்து வருகின்றனர். இத்தகைய விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: