×

ஊட்டி சேரிங்கிராசில் புதிய நிழற்குடை திறப்பு

 

ஊட்டி, டிச. 5: ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் புதிதாக நிழற்குடை திறக்கப்பட்டது. ஊட்டி அருகேயுள்ள தேனாடுகம்பை, பாரஸ்கேட், அணிக்கொரை, எப்பநாடு, கடநாடு, கெந்தோரை உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் பல்வேறு தேவைகளுக்காக ஊட்டி வருகின்றனர்.
இதுதவிர பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் மாணவர்கள் வருகின்றனர்.
இவர்கள் தங்களது கிராமங்களுக்கு செல்வதற்கு சேரிங்கிராஸ் பகுதியில் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டியுள்ளது.
அதேபோல், சேரிங்கிராஸ் பகுதியில் கலெக்டர் அலுவலகம் செல்லும் பொதுமக்களும் சேரிங்கிராஸ் பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் நிழற்குடை இல்லாத நிலையில், மழை மற்றும் வெயில் காலங்களில் சாலை ஓரங்களில், பஸ்சிற்காக காத்துநிற்க வேண்டியுள்ளது. குறிப்பாக, மாலை நேரங்களில் மாணவர்கள் வெகுநேரம் பஸ்சிற்காக காத்துநிற்க வேண்டியுள்ளது.

Tags : Ooty Charing Cross ,Ooty ,Thenadukambai ,Parasgate ,Anikorai ,Eppanadu ,Kadanadu ,Kenthorai ,
× RELATED அஞ்சலக வாடிக்கையாளர் குறைதீர்க்கும் கூட்டம்