×

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வருங்கால வேந்தர் பிறந்தநாள் விழா

 

திருச்சி, டிச.3: திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வருங்கால வேந்தர் நிர்மல் கதிரவன் பிறந்தநாள் விழா பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தார். மேலும் வருங்கால வேந்தர் நிர்மல் கதிரவன் கேக் வெட்டி அனைவருக்கும் பகிர்ந்து கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் அனந்தலட்சுமி கதிரவன், சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் நீவாணி கதிரவன், தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் செயல் இயக்குனர் முரளி, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ரஞ்சன், பதிவாளர் டாக்டர் தனசேகரன் தேவராஜ், பல்கலைக்கழக புலமுதல்வர்கள், துணை புலமுதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags : Dhanalakshmi Srinivasan University ,Trichy ,Nirmal Kathiravan ,Srinivasan ,Chancellor ,Nirmal Kathiravan… ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...