தஞ்சாவூர், டிச.3: கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தஞ்சையில் பொறி விற்பனை அமோகம். ஒரு கிலோ பொரி ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டது. கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தஞ்சையில் பொறி விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. அதேபோல் கீழவாசல், மருத்துவக் கல்லூரி சாலையில் பல கடைகளில் அகல் விளக்குகள், மண் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், தஞ்சை பூம்புகார் நிலையத்திலும் விளக்குகள் விற்பனை நடை
பெறுகிறது.
