சீர்காழி, டிச. 3: மயிலாடுதுறை மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக மூன்று நாட்களாக தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக வாய்க்கால்கள் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நீர்வளத்துறை மூலம் பல்வேறு முன்னேற்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.
இந்தப் பணிகளை மயிலாடுதுறை மாவட்டத்திற்கான நீர்வளத்துறையின் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சந்திரகலா ஆய்வு செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக சீர்காழி வட்டத்தில் எடக்குடி வடபாதி கிராமத்தில் கோவிலார் வடிகால் வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியினை மாவட்ட நீர்வளத்துறை கண்காணிப்பு அலுவலர் அலுவலர் சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
