மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு

 

திண்டுக்கல், டிச. 3: திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாம் செவ்வாய் கிழமை திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பழநி அரசு மருத்துவமனையிலும், ஒவ்வொரு மாதம் கடைசி வியாழக்கிழமை கொடைக்கானல் அரசு மருத்துவமயைிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான முகாம்கள் நடைபெறும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: