கீழ்மலை கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் தேவை

 

கொடைக்கானல், டிச. 3: கொடைக்கானல் கீழ்மலையில் உள்ள பண்ணைக்காடு, தாண்டிக்குடி, கேசி பட்டி, பாச்சலூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களுக்கும் மற்றும் பண்ணைக்காடு முதல் வத்தலக்குண்டு வரையிலும் போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் இப்பகுதிகளை சேர்ந்த பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள், கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு- தனியார் ஊழியர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: