மானூர், டிச.3: மானூர் அருகே உள்ள மேலபிள்ளையார்குளத்தை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது 4 வயது மகள் ஐஸ்வர்யா, நேற்று அங்குள்ள ரேஷன் கடை அருகே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தெரு நாய், சிறுமி ஐஸ்வர்யாவை விரட்டி விரட்டி கடித்ததில் சிறுமிக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் நாயை விரட்டியடித்து சிறுமியை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமி ஐஸ்வர்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
