செய்த வாலிபர் கைது பேட்டை, டிச.3: நெல்லை பேட்டை கோடீஸ்வரன்நகர், வேதாத்திரிநகரை சேர்ந்தவர் சுப்பையா மகன் பாண்டி (45). இவருக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லாததால் குழந்தையை தத்து எடுத்து வளர்க்க விரும்பியுள்ளார். இதனையடுத்து பாண்டி, மாயன்மான்குறிச்சியை அடுத்த குருவன்கோட்டை ஜவகர்தெருவை சேர்ந்த சங்கர் மகன் சக்திவேல் (26) என்பவரை அணுகியுள்ளார். அப்போது சக்திவேல், குழந்தை தத்தெடுத்து தருவதாக தெரிவித்துள்ளார். அதை நம்பி அவரிடம் ரூ.1.50 லட்சத்தை பாண்டி கொடுத்துள்ளார். ஆனால், பணத்தை பெற்றுக் கொண்ட சக்திவேல், குழந்தையை தத்து எடுத்து கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து பாண்டி தான் ஏமாற்றப்பட்டு உள்ளோம் என்பதை அறிந்து இது குறித்து பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சக்தி வேலை கைது செய்தனர்.
