மதுரையில் துணிகரம் ஜாமீனில் வந்தவர் குத்திக்கொலை

 

மதுரை, டிச. 2: மதுரை, மீனாட்சிபுரம் பகுதியில், ஜாமீனில் வந்தவரை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை, மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டித்துரை. இவரை ஒரு குற்ற வழக்கில் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்ட அவர், சில நாட்களுக்கு முன், நீதிமன்ற ஜாமீனில் வெளிய வந்தார். இந்நிலையில் மீனாட்சிபுரம் நாடகமேடையில் நேற்று அவர் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் பாண்டித்துரையை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பியது.

இது குறித்து தகலறிந்த செல்லூர் போலீசார், கத்திக்குத்தில் படுகாயமடைந்த பாண்டித்துரையை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த துணிகர செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். முன்பகை காரணமாக இந்த படுகொலை நடந்திருக்கலாம் என்பது, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories: