×

மாதத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை அதிகரித்து கிராம் ரூ.12 ஆயிரத்துக்கு விற்பனை

 

சென்னை: மாதத்தின் முதல் நாளான நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ரூ.12,070க்கும், சவரன் ரூ.96,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 11 மாதத்தில் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கடந்த அக்டோபர் 13ம் தேதி சவரன் ரூ.95,200க்கு விறபனையானது.

அன்றிலிருந்து தற்போது வரை தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. கடந்த 11 மாதங்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.39,360 அதிகரித்துள்ளது. தங்கம் விலை நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ. 140 அதிகரித்து ரூ.11,980க்கு, சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து, ரூ.95,840க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் மாதத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ரூ.12,070க்கும், சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.96,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.98 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,167க்கும், சவரனுக்கு ரூ.784 அதிகரித்து ரூ.105,336க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தங்கம் போன்று வெள்ளி விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து புதிய உச்சத்தை தொடுகிறது. கிராம் ரூ.192க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று அதிரடியாக கிராமுக்கு ரூ.4 அதிகரித்து 1 கிராம் ரூ.196க்கும், கிலோ ரூ.1,96,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : Chennai ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.96,000க்கு விற்பனை!