வேலாயுதபுரத்தில் ரூ.13 லட்சத்தில் நவீன உடற்பயிற்சி கூடம்

கடையநல்லூர், டிச.2: கடையநல்லூர் தெற்கு ஒன்றியம், வேலாயுதபுரத்தில் இளைஞர்களின் உடல்வலிமையை மெருகேற்றும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13 லட்சம் செலவில் கட்டப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடத்தின் திறப்புவிழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்எல்ஏ, நவீன உடற்பயிற்சிக்கூடத்தை திறந்துவைத்துப் பார்வையிட்டார். நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் வி.பி. மூர்த்தி, மாவட்ட துணைச்செயலாளர் பொய்கை சோ. மாரியப்பன், சார்பு அணிகளின் மாவட்டச் செயலாளர்கள் சந்திரன், சத்யகலாதீபக், டாக்டர் திலீபன், செந்தில்குமார், ஒன்றியச் செயலாளர் ஜெயகுமார், ஜெ. பேரவை மாவட்ட இணைச்செயலாளர் இடைகால் செல்லப்பா, சிறுபான்மை பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் நியாஸ் மைதீன், சந்திரகுமார், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: